அனுஷ்காவின் எடையால் தள்ளிப் போனது பாகுபலி 2!

அனுஷ்காவின் எடையால் தள்ளிப் போனது பாகுபலி 2!

86

864822145

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் பாகுபலி 2 பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாக இன்னும் பல ஆண்டுகளுக்கு விளங்கவிருக்கிறது. இப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு சீரியஸாக இருக்க வேண்டும்? ஆனால் அதனை அனுஷ்கா பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அவர் செய்த ஒரு தேவையில்லாத வேலையால் பாகுபலி 2 படப்பிடிப்பையே தள்ளி வைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. இதற்கு காரணம் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றியதுதான்.

பாகுபலியில் ஒல்லியாக நடித்திருந்த அனுஷ்கா இடையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்துக்காக இருமடங்கு தன் எடையை ஏற்றினார். குறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் ஏற்றினார். ஆனால் இப்போது குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார்.

ஓரளவுக்குமேல் எடை குறையாமல் பூசியபடியே தோற்றமளிக்கிறார். பாகுபலி 2 வில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அப்படியே வைத்து எடுத்துவிட்ட ராஜமௌலி முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுக்க முடியாமல் டென்ஷன் ஆகிவிட்டார்.

அனுஷ்காவின் பூசிய தோற்றம் ஃப்ரேமில் நன்கு தெரிவதால் ஷூட்டிங்கையே பேக் அப் செய்துவிட்டு உடல் எடையை குறைத்துவிட்டு வா என்று அனுப்பிவிட்டாராம்.

அனுஷ்காவின் முட்டாள்தனத்தால் பாகுபலி 2 ரிலீஸே தள்ளிப்போகும் என படக்குழு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

NO COMMENTS

LEAVE A REPLY