Home Tamil Cinema News பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

115

katappa-screengrab-youtube1

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் 600 கோடியை வசூலித்து சாதனை செய்தது. இதனை அடுத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமென படக்குழு அறிவித்தது.

இதன் காரணமாக இப்படத்தின் 2 வது பாகத்திற்கு உலகம் முழுவதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டின் விடை தெரியாத முக்கிய கேள்விகளில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்தாகும். இந்தக் கேள்விக்கான விடை 2 வது பாதியில் தான் தெரியவரும் என்பதால் ரசிகர்கள் பலரும் பாகுபலி 2 விற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது 2017 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகும் என்று படத்தின் விஎப்எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சித்தார்த் ஐயர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி 2 வெளியாகும் தேதி தெரிந்தவுடன் ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here