Home Tamil Cinema News ‘பாகுபலி 2’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

‘பாகுபலி 2’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

83

Bahubali Prabhas Wallpaper 2(SouthyMania)

‘பாகுபலி’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி வெளிவந்துள்ளது.

‘பாகுபலி 2’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் 40% படப்பிடிப்பு முதல் பாகத்தின்போதே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் கிராபிக்ஸ் உள்பட முக்கிய பணிகள் முடிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘பாகுபலி 2’ படத்தில் புதியதாக நடிகர்கள் யாரும் இணையவில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்பாகத்தில் பாகுபலியை கொலை செய்தது கட்டப்ப்பா தான் என சஸ்பென்ஸுடன் முடித்துள்ளதால், கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்பதை அறிய உலக  ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.