Home Tamil Sports News ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வங்கதேசம் அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வங்கதேசம் அபார வெற்றி

35

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டதால், அந்த அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 260 ரன்னும், ஆஸ்திரேலியா அணி 217 ரன்னும் எடுத்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி 221 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 265 ரன்னை வெற்றி இலக்காக கொண்டு 2-வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி, வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசனின் சுழற்பந்து வீச்சுக்கு மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி 244 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதன் முறையாக வெற்றி பெற்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது.