Home Tamil Sports News தல தோனி-க்கு பத்மபூஷன் விருது!! பிசிசிஐ பரிந்துரை..

தல தோனி-க்கு பத்மபூஷன் விருது!! பிசிசிஐ பரிந்துரை..

98
SHARE

கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிப்புடன் விளையாடி வரும் அவரது கடினஉழைப்பினை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் தனது தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி 3 முறை ஐசிசி கோப்பையை வென்றுள்ளார். பத்மபூஷன் விருது கிடைக்கும் பட்சத்தில் கவுரவமிக்க இந்த விருதைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார்.

இந்த பரிந்துரை குறித்து கூறியுள்ள பிசிசிஐயின் மூத்த அதிகாரி, இந்த ஆண்டு பத்ம விருதுக்காக ஒரே ஒருவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார். குழுவில் உள்ள அனைவரின் ஒரே விருப்பமாக தோனி இருந்ததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தோனியின் பெயரே பரிந்தரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காரணம் : “ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஏறத்தாழ 10 ஆயிரம் ரன்கன் எடுத்திருக்கிறார், சில வீரர்கள்மட்டுமே 90 டெஸ்ட் போட்டிகளுக்குமேல் விளையாடியுள்ளனர். அவர்களில் தோனி பல சிறப்புகளை பெற்றுள்ளார் என்பதாலேயே அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்”.

 தோனி 302 ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடி 9737 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் 4876 ரன்கனையும் குவித்து வைத்துள்ளார். இதே போன்ற 78 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1212 ரன்களை எடுத்துள்ளார்.

16 சர்வதேச போட்டிகளில் (6 டெஸ்ட் மற்றும் 10 ஒரு நாள் போட்டி) சதமும், 100 சர்வதேச போட்டிகளில் அரை சதமும் அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனி 584 கேட்ச்சுகளை(256 டெஸ்ம், 285 ஒரு நாள் போட்டி மற்றும் 43 டி 20 சர்வதேச போட்டி) பெற்றுள்ளார்.

ஸ்டம்ப்பிங்: இதே போன்று 163 ஸ்டம்ப்பிங்குகளையும் செய்துள்ளார். உலக அளவில் விக்கெட் கீப்பர்களில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 100 ஸ்டம்ப்பிங்குகளுக்கு மேல் செய்த ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here