Home Tamil Sports News பிசிசிஐ-யிடம் முன்னாள் அம்பயர்கள் கோரிக்கை…

பிசிசிஐ-யிடம் முன்னாள் அம்பயர்கள் கோரிக்கை…

70
SHARE

மும்பை: இந்தியாவில் கிரிக்கெட்டின் தலையெழுத்தை ஐபிஎல் போட்டிகள் மாற்றி எழுதியுள்ளன. ஏற்கனவே உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ), ஐபிஎல் போட்டிகளால், கூரையை பிச்சுக்கிட்டு கொட்டுது. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வருவாய் பெருகியுள்ளது. வீரர்கள் காட்டில் பணமழை கொட்டி வருகிறது. சொந்தமாக ஏரோபிளேன் வாங்கலாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகிறார்.

அந்தளவுக்கு பலருடைய வாழ்க்கையை கிரிக்கெட் பிரகாசமாக்கியுள்ளது. நாள் முழுவதும் வெயிலில் காய்கிறோமே. எங்களை கவனிக்க மாட்டீர்களா என்று முன்னாள் அம்பயர்கள் தற்போது கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர்.

டிவி அம்பயர், டிஆர்எஸ் முறை என எவ்வளவே நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், மைதானத்தில் அம்பயர்கள் மிக முக்கியமானவர்கள். ஓய்வு பெற்ற அம்பயர்களுக்கு தற்போது மாதத்துக்கு, ரூ.22,500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

அதை உயர்த்தி தர வேண்டும் என்று ஓய்வு பெற்ற அம்பயர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மொத்தமாக ஒரு ரொக்கம் வழங்கப்படுகிறது. ஒன்று முதல், 9 டெஸ்ட்களில் விளையாடியுள்ளவர்களுக்கு ஒரே தவணையாக, ரூ.35 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று முன்னாள் அம்பயர்கள், பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பிசிசிஐ நிர்வாகக் குழுவின் முடிவுக்காக, முன்னாள் அம்பயர்கள் காத்திருக்கின்றனர்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here