Home Tamil Cinema News மாதவனை தொடர்ந்து பாக்சராக நடிக்கவிருக்கும் பரத்

மாதவனை தொடர்ந்து பாக்சராக நடிக்கவிருக்கும் பரத்

151

பரத்

இயக்குனர் விஜய் மில்டன், தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக ராதிகா பிரசித்தா நடிக்கவுள்ளார். இவர் குற்றம் கடிதல் படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

இந்தப் படத்தில் ராஜகுமாரன் புலி வேஷ கலைஞராக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இப்படத்தில் பரத் பாக்சராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாதவன் பாக்சராக நடித்து வெளிவந்த இறுதிச்சுற்று படத்தை போல் பரத்தும் இந்த படத்தில் பாக்சராக நடிப்பது படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.