Home Tamil Movie Reviews பூலோகம் – விமர்சனம்

பூலோகம் – விமர்சனம்

325
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் புரட்சி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் N.கல்யாண கிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் பூலோகம் படத்தை மூவுலகமும் போற்றும்படி மிளிர வைத்துள்ளது என்றால் மிகையாகாது.

பூலோகம் - தமிழ் திரையுலகம் போற்றும் மிகையில்லா திரைக்காவியம்.

3
இயக்கம்: N.கல்யாண கிருஷ்ணன்
ஒளிப்பதிவு: S.R.சதீஷ்குமார்
எடிட்டிங் V.T.விஜயன், N.கணேஷ்குமார்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன்
நடிகர்கள்: ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன்

பரம்பரை பரம்பரையாக பாக்ஸிங் எனும் குத்துசண்டை விலையாட்டில் ஆதிக்கம் செலுத்திவருபவர் ஜெயம்ரவி, இவர் வட சென்னை பகுதியை சேர்ந்த்வர். பாக்ஸரான தன் அப்பாவை தனது சின்ன வயதிலேயே இழந்த ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை மட்டும் முலு மூச்சாகக் கொண்டிருக்கும் பொன்வண்ணன்.

பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தி அதீத பணம் சம்பாதிக்கிறார் பிரகாஷ்ராஜ். ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் சக குத்துச்சண்டை வீரர் உயிர்போகும் நிலைக்கு ஆளாவதை கண்டு மனம் வெறுக்கும் ஜெயம் ரவி. தன் வாழ்வில் இனி குத்துசண்டை வேண்டாம் என ஒதுங்கி விலகுகிறார். அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து பலியாக்க முயற்சிக்கிறார். ஆனால் மன வேதனையில் இருக்கும் ஜெயம் ரவி அதனை மறுக்கிறார்.

Bhooloham 1ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜின் பணத்தாசையை உணர்ந்து கொள்ளும் ரவி, அவரிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்கின்றார். இதனால் கொபத்தின் உச்சிக்கு செல்லும் பிரகாஷ்ராஜ், ஜெயம் ரவியை தீர்த்து கட்ட வெளிநாட்டில் இருந்து ஒரு பாக்ஸரை களம் இறக்குகிறார்.

அதன் பிறகே ஆட்டம் சூடுபிடிக்கிறது. இறுதியில், விலகி நின்ற ஜெயம் ரவி ஜெயித்தாரா? வெளிநாட்டு பாக்ஸரும் அவரை களம் இறக்கிய பிரகாஷ் ராஜூம் ஜெயித்தனரா? என்பதுதான் படத்தின் கதை.

Bhooloham 2

ரவி வசிக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்தும் த்ரிஷாவுடனான ரவியின் காதலை அழகாக காட்டி, அக்ரோசமாக செல்லும் காட்ச்சிகளுக்கு நடுவில் சற்று இளைப்பாற வைக்கிறார் இயக்குனர்.

ஜெயம் ரவி, இளம் குத்துச் சண்டை வீரராக கச்சிதமாக நடித்திருக்கிறார். குத்துசண்டை காட்சிகளில் நிஜ பாக்ஸிங் வீரர்களே தோத்துப் போகுமளவிற்கு ரிஸ்க் எடுத்திருக்கும் ரவிக்கு நிச்சயம் ஒரு கைத்தட்டலுடன் பாராட்டினை சொல்லியே ஆகவேண்டும்.

boologam 3

த்ரிஷா, லோக்கல் ஹோட்டல் அதிபராக செம கலக்கல். ஜெயம் ரவியின் லோக்கல் நடிப்புக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

பொன்வண்ணனும் , தன் பங்கிற்கு., ரவியின் குருநாதராக பொலந்து கட்டியிருக்கிரார். க்ளைமாக்ஸில் வரும் அந்த ஹாலிவுட் பாக்ஸரும் கச்சிதமாக நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். பிரகாஷ்ராஜின் சைலண்ட் வில்லதனத்தில் வழக்கம் போலவே வெற்றிகரமான நடிப்பை வழங்கி பாரட்டுக்கள் வாங்கிவிடுகிறார்.

1404186793_Bhooloham-Movie-Stills-2

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் புரட்சி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் N.கல்யாண கிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் பூலோகம் படத்தை மூவுலகமும் போற்றும்படி மிளிர வைத்துள்ளது என்றால் மிகையாகாது.

ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரின் சொல்லத்தோன்றும் நடிப்பு போலவே, S.R.சதீஷ்குமாரின் ஒவிய ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இனிய இசை, S.P.ஜனநாதனின் லோக்கல் நறுக் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்தினை விறுவிறுப்பாக கொண்டுசென்று ரசிக்க வைக்கிறது.

பூலோகம் – தமிழ் திரையுலகம் போற்றும் மிகையில்லா திரைக்காவியம்.