Home Tamil Cinema News பாத்து சந்தோஷப்பட ஓவியாவும் இல்ல, எரிச்சலாக ஜூலியும் இல்ல: அடப் போங்க பிக் பாஸு!

பாத்து சந்தோஷப்பட ஓவியாவும் இல்ல, எரிச்சலாக ஜூலியும் இல்ல: அடப் போங்க பிக் பாஸு!

26

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா, ஜூலி இல்லாமல் போர் அடிக்கிறது என்கிறார்கள் பார்வையாளர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை முதலில் ஜூலிக்காகவும், பின்னர் ஓவியாவுக்காகவும் பார்த்தவர்களே அதிகம். தற்போது அந்த இருவருமே பிக் பாஸ் வீட்டில் இல்லை. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப போர் அடிப்பதாக பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். ஜூலியை திட்டித் தீர்த்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கவாவது பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர் என்பது தான் உண்மை. தற்போது அவரும் இல்லாதது பலருக்கு போர் அடிக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here