Home Tamil Cinema News நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு பெருகும் எதிர்ப்பு!

நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு பெருகும் எதிர்ப்பு!

183

eCsTo2C

சமூக வலைத் தளங்களில் ஏராளமானோர் நட்சத்திரக் கிரிக்கெட் நிதி திரட்டை கடுமையாக சாடியுள்ளனர். நடிகர்கள் ஒரு பொது நோக்கத்துக்காக இப்படி நிதி திரட்டினால் ஏற்கலாம். ஆனால் இவர்கள் நடத்தும் சங்கத்தின் நிதித் தேவைக்காகவும் மக்களிடம்தான் கையந்துவதா என கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

பொதுமக்கள் பாவிக்கும் சமூக வலைத் தளங்களில் ஏராளமானோர் இந்த நட்சத்திரக் கிரிக்கெட் நிதி திரட்டை கடுமையாகச் சாடியுள்ளனர். சென்னைப் பெருவெள்ளம் அல்லது வேறு ஏதாவது இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

நடிகர் சங்கம் என்பது இவர்கள் வீட்டுச் சமாச்சாரம் போன்றது. சங்கத்துக்கு நிதி வேண்டும் என்றால், அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்துதான் தரவேண்டும். அதை விட்டுவிட்டு கலை நிகழ்ச்சி, கிரிக்கெட் என்று கூறி மக்களின் பாக்கெட்டில் கை வைக்கக் கூடாது. இவர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளமே மக்கள் பணம்தானே’ என்று பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.