Home Astrology Birth Numerology பிறந்த நாள் பலன்கள் 2016

பிறந்த நாள் பலன்கள் 2016

4891

இந்த வருட பிறந்த தேதி பலங்கள் எண்கள் அடிப்படையில் உள்ளது, பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 | A, I, J, Q, Y
*இனிமையாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள்.
*வருமானம் திருப்தியளிக்கும். சேமிக்கவும் வாய்ப்புண்டு.
*பெற்றோரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம்.
*வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு உண்டாகும்.
*தொழிலதிபர்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர்.
*வியாபாரிகள் புதிய கிளைகளை நிறுவி லாபம் காண்பர்.
*பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நம்பிக்கைக்கு உரியவராவர்.
*அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும்.
*விவசாயிகள் தானிய விலையேற்றத்தால் மகிழ்ச்சி அடைவர்.
*பெண்கள் பொதுவிஷயத்தில் அடிக்கடி பங்கேற்று மகிழ்வர்.
*மாணவர்கள் சுறு சுறுப்புடன் படிப்பில் ஈடுபடுவர்.


 

2, 11, 20, 29 | B, K, R
*நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணுவீர்கள்.
*வருமானம் சீராக இருக்கும். சிக்கனமாக செலவழிப்பீர்கள்.
*சுபம் குறித்த பேச்சில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
*உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம்.
*தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர்.
*வியாபாரிகள் வங்கிநிதியுதவியுடன் முதலீட்டை அதிகப்படுத்துவர்.
*பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.
*அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படுவர்.
*விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பர்.
*பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.
*மாணவர்கள் அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.


 

3, 12, 21, 30 | C, G, L, S
*வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
*அதிர்ஷ்டவசமாக வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
*உறவினர் வருகையால் வீட்டில் கலகலப்பு உருவாகும்.
*உடல், மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.
*தொழிலதிபர்கள் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர் விருப்பம் அறிந்து செயல்படுவர்.
*பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும்.
*அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.
*விவசாயிகள் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
*பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று மகிழ்வர்.
*மாணவர்கள் வகுப்பில் முதன்மை வகிப்பர்.


 

4, 13, 22, 31 | D, M, T
*இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்து மகிழ்வீர்கள்.
*பலவழியிலும் வருமானம் வந்து கொண்டிருக்கும்.
*விரைவில் சுபநிகழ்ச்சி நடத்திட நேரம் கை கூடி வரும்.
*பெற்றோர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
*தொழிலதிபர்கள் சாதுர்ய பேச்சால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
*வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் செயல்படுவர்.
*பணியாளர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பர்.
*அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
*விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர்.
*பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.
*மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர்.


 

5, 14, 23 | E, H, N, X
*புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
*பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
*விரைவில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
*பெற்றோர் உடல்நலனில் அக்கறை உண்டாகும்.
*தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் வருமானம் காண்பர்.
*வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும்.
*பணியாளர்கள் விரும்பிய பணி, இட மாற்றம் கிடைக்கப் பெறுவர்.
*அரசியல்வாதிகள் அரசியல்ரீதியாக நீண்ட பயணம் மேற்கொள்வர்.
*விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் வளர்ச்சியடைவர்.
*பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபடுவர்.
*மாணவர்கள் ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.


 

6, 15, 24 | U, V, W
*பிறர் தயவின்றி சொந்தக்காலில் நிற்க முயல்வீர்கள்.
*வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும். சேமிக்கலாம்.
*சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு.
*உடற்பயிற்சிகளில் அதிக அக்கறை செலுத்த தொடங்குவீர்கள்.
*தொழிலதிபர்கள் நிர்வாகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொள்வர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர் நலனில் அக்கறை காட்டுவர்.
*பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் நற்பெயருடன் திகழ்வர்.
*அரசியல்வாதிகள் தொண்டர்நலனுக்காகப் பாடுபடுவர்.
*விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துவர்.
*பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.
*மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படிப்பர்.


 

7, 16, 25 | O, Z
*பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
*வருமானம் திருப்தியளிக்கும். தேவை நிறைவேறும்.
*சுபவிஷயத்தில் இருந்த தடையனைத்தும் நீங்கும்.
*ஆரோக்கியம் மேம்படும். கடமையில் ஆர்வம் கூடும்.
*தொழிலதிபர்கள் புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.
*பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.
*அரசியல்வாதிகள் தலைமையின் இணக்கத்திற்கு உரியவராவர்.
*விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும்.
*பெண்கள் கணவரின் அ ன்புக்குரியவராக விளங்குவர்.
*மாணவர்கள் பாடங்களை எளிதில் கற்று தேர்ச்சியடைவர்.


 

8, 17, 26 | F, P
*மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவீர்கள்.
*வருமானம் உயரும். பழைய கடன்பாக்கி தீரும்.
*சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.
*உடல்நிலை மந்தமாக இருக்கும். அஜீரண கோளாறு ஏற்படலாம்.
*தொழிலதிபர்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர்.
*வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர்.
*பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.
*அரசியல்வாதிகள் தலைமையின் கருத்துக்கு மதிப்பளிப்பர்.
*விவசாயிகள் நிலப்பிரச்னையில் இருந்து விடுபடுவர்.
*பெண்களுக்கு தாய்வீட்டினரின் ஆதரவு கிடைக்கும்.
*மாணவர்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பர்.


 

9, 18, 27
*கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.
*கையில் எப்போதும் பணம் புழங்கும்.
*சுப விஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம்.
*உடல் வலிமையோடு மன திடமும் நன்றாகவே உள்ளது.
*தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.
*வியாபாரிகள் புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் அடைவர்.
*பணியாளர்கள் விண்ணப்பித்த கடன் வந்து சேரும்.
*அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
*விவசாயிகள் புதிய நில சேர்க்கையில் ஆர்வமாக செயல்படுவர்.
*பெண்கள் ஆன்மிக பணிகளில் மும்முரமாக செயல்படுவர்.
*மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here