Home Astrology Birth Numerology பிறந்த நாள் பலன்கள் 2017

பிறந்த நாள் பலன்கள் 2017

505

பிறந்த நாள் பலன்கள் (1.1.2017-31.12.2017)

இந்த வருட பிறந்த தேதி பலங்கள் எண்கள் அடிப்படையில் உள்ளது, பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y

*திட்டமிட்டுச் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காண்பீர்கள்.
*வருமானம் திருப்தியளிக்கும். சிக்கனத்தால் சேமிக்க முயல்வீர்கள்.
*சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு இனிதாக நிறைவேறும்.
*உடல்நிலை சீராக இருக்கும். மனதிலும் மகிழ்ச்சி உண்டாகும்.
*தொழிலதிபர்கள் புதிய துறைகளில் கால் பதித்து வருமானத்தைப் பெருக்குவர்.
*வியாபாரிகள் விடாமுயற்சியால் ஆதாயத்தை அதிகரிக்கச் செய்வர்.
*பணியாளர்கள் விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.
*அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்வர்.
*விவசாயிகள் விளைபொருளுக்கு அதிக விலை கிடைக்கப் பெறுவர்.
*பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
*மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர்.

2, 11, 20, 29 B, K, R

*வருமானம் அதிகரிக்கும். கடனில் பெரும்பகுதி அடைபடும்.
*சுபவிஷயத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
*உடலில் புத்துணர்ச்சி மேலோங்கும். மனதிலும் நிம்மதி நிலவும்.
*தொழிலதிபர்கள் வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு லாபம் காண்பர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் முன்னேற்றம் அடைவர்.
*பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நிர்வாகத்தினரிடம் பரிசும், பாராட்டும் பெறுவர்.
*அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி வந்து சேரும்.
*விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.நிலம் வாங்கவும் யோகமுண்டு.
*பெண்கள் தாய் வீட்டினரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.
*மாணவர்கள் பெற்றோர் மகிழும் விதத்தில் படிப்பர்.

3, 12, 21, 30 C, G, L, S

*மனதில் எப்போதும் சந்தோஷம் குடியிருக்கும்.
*வருமானம் உயரும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
*வீட்டில் விரைவில் சுபநிகழ்ச்சி நடத்தும் சூழ்நிலை உருவாகும்.
*ஆரோக்கியம் மேம்படும். பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
*தொழிலதிபர்கள் நிர்வாகச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துவர்.
*வியாபாரிகள் புதிய உத்தி மூலம் வாடிக்கையாளரைக் கவர்வர்.
*பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.
*அரசியல்வாதிகள் தலைமையின் பாராட்டைப் பெற்று மகிழ்வர்.
*விவசாயிகள் புதிதாக நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
*பெண்களுக்கு நகை, நவீன பொருட்கள் வாங்க யோகமுண்டு.
*மாணவர்கள் படிப்பில் சாதனை படைக்க கடுமையாக பாடுபடுவர்.

4, 13, 22, 31 D, M, T

*சாதுர்யமாகச் செயல்பட்டு பணிகளை நிறைவேற்றுவீர்கள்.
*வருமானம் திருப்தி தரும். குடும்பத்தேவை பூர்த்தியாகும்.
*குடும்பத்தில் சுபநிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும்.
*உடல், மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி மேலோங்கும்.
*தொழிலதிபர்கள் சக அதிபர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் வளர்ச்சிநிலை அடைவர்.
*பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும்.
*அரசியல்வாதிகள் பயணத்தின் மூலம் இனிய அனுபவம் காண்பர்.
*விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும்.
*பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவர்.
*மாணவர்கள் உற்சாகத்துடன் படித்து முன்னேறுவர்.

5, 14, 23, E, H, N, X

*கடந்த ஆண்டிற்குரிய உழைப்பின் பலனை இந்த ஆண்டு அனுபவிப்பீர்கள்.
*சேமிக்கும் அளவு பண நிலையில் முன்னேற்றம் உண்டு.
*உடல்நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.
*தொழிலதிபர்கள் பல ஒப்பந்தம் மூலம் கைநிறைய சம்பாதிப்பர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவித்து விற்பனையை
இருமடங்காக்குவர்.
*பணியாளர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு பனி போல் மறையும்.
*அரசியல்வாதிகள் எதிர்பார்த்த புதிய பதவி விரைவில் கிடைக்கும்.
*விவசாயிகள் டிராக்டர், நவீன உழவுக்கருவிகள் வாங்கி சாகுபடியை உயர்த்துவர்.
*பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா செல்வர்.
*’அடடா…. இந்தப் பையனா இப்படி’ என்று ஆச்சரியப்படுமளவு மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர்.

6, 15, 24, U, V, W

*பெரும் அதிர்ஷ்டத்தால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள்.
*வருமானம் அதிகரிக்கும்.
*சுபவிஷயத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
*உடல்நிலையில் இருந்த தொல்லை நீங்கி மகிழ்வீர்கள்.
*தொழிலதிபர்கள் தொழில் ரீதியான பயணம் மூலம் லாபத்துடன் திரும்புவர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் நல்ல வளர்ச்சி காண்பர்.
*பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பிற்கு உரியவராகத் திகழ்வர்.
*அரசியல்வாதிகள் தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் இருப்பர்.
*விவசாயிகள் விளைபொருளுக்கு நல்லவிலை கிடைக்கப் பெறுவர்.
*பெண்கள் கணவரின் அன்பையும், அரவணைப்பையும் பெற்று மகிழ்வர்.
*மாணவர்கள் மிகச்சிறப்பாகப் படித்து பெற்றவர்களுக்கு பெருமை தேடித்தருவர்.

7, 16, 25, O, Z

*பெருந்தன்மையுடன் அனைவருக்கும் உதவி செய்வீர்கள்.
*வருமானம் சீராக இருக்கும். கடன் பிரச்னை அகலும்.
*சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.
*பெற்றோர் உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
*தொழிலதிபர்கள் விரிவாக்க முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
*வியாபாரிகள் அனுபவசாலிகளின் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர்.
*பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவர்.
*அரசியல்வாதிகள் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசனையில் ஈடுபடுவர்.
*விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர்.
*பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
*மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர்.

8, 17, 26, F, P

*செல்வாக்கு மிக்க மனிதராக விளங்குவீர்கள்.
*சேமிக்கும் விதத்தில் வருமானம் சிறப்பாக அமையும்.
*உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
*சுபவிஷயத்தில் தாமதம் நீங்கி நன்மையாக முடியும்.
*தொழிலதிபர்கள் அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நல்ல லாபமடைவர்.
*பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை ஒன்றுக்கு இரண்டாகக் கிடைக்கும்.
*அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
*விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும்.
*பெண்கள் புகுந்தவீட்டில் செல்வாக்குடன் திகழ்வர்.
*மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படித்து முன்னேறுவர்.

9, 18, 27

*சாதுர்யமாகச் செயலாற்றி முன்னிலை வகிப்பீர்கள்.
*வருமானம் உயரும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
*பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
*உடல்நலம் சிறப்பாக அமையும்
*தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி லாபம் உயரும்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் ஆதாயத்தைப் பெருக்குவர்.
*பணியாளர்கள் பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
*அரசியல்வாதிகள் தலைமைக்கு விசுவாசமாக நடந்து நல்ல பெயர் எடுப்பர்.
*விவசாயிகள் பல வகை பயிர்களிலும் அதிக மகசூல் பெறுவர்.
*பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
*மாணவர்கள் கல்வியோடு விளையாட்டிலும் ஆர்வம் கொள்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here