Home Tamil Cinema News பாபிசிம்ஹா – ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது

பாபிசிம்ஹா – ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது

100

bobby-reshmi-wedding.jpg.image.784.410

நடிகர் பாபிசிம்ஹா ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அவருக்குக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் தற்போது கோ-2, இறைவி, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மி மேனன் இருவரும் ‘உறுமீன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்ததாக கூறப்பட்டது. ரேஷ்மி மேனன் கேரளாவை சேர்ந்தவர்.

அவர் இனிது இனிது, தேநீர் விடுதி, பர்மா, மாயா, கிருமி ஆகிய படங்களிலும் ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். பாபி சிம்ஹாவும்-ரேஷ்மி மேனனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம் நேற்று காலை திருப்பதியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு வருகின்ற திங்கட்கிழமை (25-04-2015) சென்னையில் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here