Home Tamil Cinema News மிரட்டல் போலீசாக மாறும் பாபி சிம்ஹா?

மிரட்டல் போலீசாக மாறும் பாபி சிம்ஹா?

99

bobby

நடிகர் பாபி சிம்ஹா நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார். அந்தப்படத்தில் அவரது நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இருப்பினும் ஜிகர்தண்டாவுக்குப் பின் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமுடன் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி இவருக்கு ஏற்பட்டுள்ளது.

பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கோ 2’ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் நிக்கி கல்ரானி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் சரத்-பாபி சிம்ஹா கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தப்படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் வேடத்தில் நடிக்கப் போவதாகவும், இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்றும் கூறுகின்றனர். இந்தப் படத்தின் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்ட பின்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here