Home World News கலிஃபோர்னியா காட்டுத் தீ: 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

கலிஃபோர்னியா காட்டுத் தீ: 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

25

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

17 இடங்களில் ஏற்பட்ட தீயால் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் அளவிலான வனம் கருகி நாசமடைந்துள்ளது. இரண்டாயிரம் கட்டிடங்கள் தீக்கிரையானதாகவும், ((Anaheim)) அனஹீம் மலைப்பகுதியில் குடியிறுப்புப் பகுதியில் ஏற்பட்ட தீயினால் ஏராளமான வீடுகள் தீக்கிரையானதாகவும் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதுவரை மூவாயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி நிகழும் வனத்தீயால் அப்பகுதி மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக வீடுகளை இழந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.