Home Tamil Cinema News நடிகர் தனுஷிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் – நடிகை பூஜா ஜவேரி

நடிகர் தனுஷிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் – நடிகை பூஜா ஜவேரி

117

Pooja-Jhaveri

பாலிவுட் நடிகையான பூஜா ஜவேரி தற்போது பிரபு சாலமனின் புதிய படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பூஜா ஜவேரி, கீர்த்தி சுரேஷ் என்று 2 நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறும்போது தனுஷுடன் இணைந்து நீங்கள் சில நிமிடங்கள் இருந்தாலே அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அவரின் அர்ப்பணிப்பு, ஆளுமை மற்றும் நடிப்புத் திறமை ஆகியவை என்னைக் கவர்ந்தது.

முதல் படத்திலேயே பிரபு சாலமன், தனுஷ் ஆகிய 2 பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து வேலை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லோருடைய அறிமுகமும் இப்படி இருக்காது என்பதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக என்னை உணர்கிறேன்.

மேலும் பிரபு சாலமன் பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்பிற்கு செல்கிறார். இதனால் நடிப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது இவ்வாறு பூஜா ஜவேரி தெரிவித்திருக்கிறார்.