Home World News பிலிப்பைன்ஸ்: புயலில் சிக்கிய சரக்கு கப்பல் மூழ்கி இந்திய மாலுமிகள் மாயம்

பிலிப்பைன்ஸ்: புயலில் சிக்கிய சரக்கு கப்பல் மூழ்கி இந்திய மாலுமிகள் மாயம்

33

பிலிப்பைன்ஸ்: ஹாங்காங் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. இந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 22 பேர் இருந்தனர்.

அப்போது கடலில் பலத்த புயல் காற்று வீசியது. புயலில் சிக்கிய அந்த சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்து, மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதையடுத்து, அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த மற்ற 3 கப்பல்கள் தீவிர மீட்புபணியில் ஈடுபட்டன. இதன் மூலம் இந்திய மாலுமிகள் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் 11 மாலுமிகள் மாயமாகிவிட்டனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

இது குறித்து ஜப்பான் கடற்படைக்கு தகவல் தெரியவந்ததும், மீட்பு பணிக்காக 2 ரோந்து படகுகள் மட்டும் 3 விமானங்களை அங்கு அனுப்பிவைத்தது. எனினும் கடலில் புயலின் சீற்றம் குறையாததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

Related Posts