Home Tamil Cinema News தொடரும் லிங்கா படத்தின் கதை மீதான வழக்கு விசாரணை

தொடரும் லிங்கா படத்தின் கதை மீதான வழக்கு விசாரணை

87

rajinis-lingaa

முல்லைவனம் 999 என்ற தனது  கதையை அனுமதியின்றி பயன்படுத்தி ரஜினி நடித்த லிங்கா படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனது முல்லைவனம் 999 படத்தின் கதையை திருடி, லிங்கா படத்தை தயாரித்து உள்ளனர். இதனால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமா கதாசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதனால் இந்த மனு மீதான விசாரணை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் லிங்கா படத்தின் கதையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நீதிபதி விஸ்வநாதன் வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். இன்றைய விசாரணை முடிந்தவுடன் அதுகுறித்த தகவல்கள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here