Home Tamil Cinema News தங்கமகன் படத்தை பார்த்து பாராட்டிய சென்சார் குழுவினர்!

தங்கமகன் படத்தை பார்த்து பாராட்டிய சென்சார் குழுவினர்!

634

thanga-magan

தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள ‘தங்கமகன்’ வருகின்ற 18-ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவிருக்கிறது. இதனால் திரையுலக ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து அதே டீம் இணைந்து உருவாக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் வெலியிடப்பட்ட இதன் டிரெய்லர் ரசிகைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ரிலீசுக்கு தயாராகியிருக்கும் ‘தங்கமகன்’ படம் சென்சார் நேற்று செய்யப்பட்டது. இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘நீட் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் ஃபிலிம்’ என்று தங்கமகனுக்கு பாராட்டு தெரிவித்து, படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இதனால் ‘தங்கமகன்’ படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், அனிருத் என பெரும் கலைஞர்கள் இணைந்துள்ள இப்படம் தெலுங்கில் ‘நவ மன்மதுடு’ என்ற பெயரில் அதே தினம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.