லிப் டூ லிப் முத்தக்காட்சி வெட்டப்பட்டதால் சோகத்தில் ஆழ்ந்த காஜல்!

லிப் டூ லிப் முத்தக்காட்சி வெட்டப்பட்டதால் சோகத்தில் ஆழ்ந்த காஜல்!

207

Kajal Lip Lock

நடிகை காஜல் அகர்வால் தற்போது டூ லப்ஷான் கி கஹானி என்ற இந்தி படத்தில் தற்போது நடித்துவருகிறார். அவருடன் இணைந்து ரன்தீப் ஹூடா நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில், ரன்தீப் ஹூடா-காஜலின் லிப் டூ லிப் முத்தக்காட்சி பாலிவுட் தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் இதுவரை காஜல் அகர்வால் இதுபோன்ற முத்தக் காட்சிகளில் நடித்தது இல்லை என்பதால் கோலிவுட், டோலிவுட் ஹீரோக்களின் காதில் இந்த செய்தி காட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காஜலின் லிப் டூ லிப்பை வைத்து படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்த படக்குழுவும், காஜலும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காரணம் படத்தில் 18 நொடிகள் இடம்பெறும் அந்த முத்தக்காட்சி படு ஆபாசமாக இருப்பதாகக் கூறி, தணிக்கைக்குழுவினர் அவற்றை பாரபட்சம் பாராமல் வெட்டி எறிந்துள்ளனராம்.

NO COMMENTS

LEAVE A REPLY