Home Tamil Breaking News வடமாநிலங்களில் சத் பூஜா திருவிழா!

வடமாநிலங்களில் சத் பூஜா திருவிழா!

28

 வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த வாரத்தில் கொண்டாடப்படுவது சத் பூஜா எனப்படும் திருவிழா ஆகும். இதற்காக ஏராளமானோர் முக்கிய ஆலயங்களில் திரண்டிருந்தனர்.

கங்கை போன்ற புனித நீரில் நீராடி மக்கள் விழாக்கோலம் காண்பது வழக்கம். இதனையடுத்து மும்பையின் ஜூஹூ கடற்கரையில் சூரியன் உதயமாகும் போது மக்கள் நீரில் இறங்கி பிரார்த்தனை செய்தனர்.

 பாட்னாவில் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் சத் பூஜைகளில் கலந்துக் கொண்டார். இதே போன்று லாலு பிரசாத் யாதவும் தமது இல்லத்தில் மனைவி ராப்ரி தேவி மற்றும் ஆதரவாளர்கள் நடத்திய 36 மணி நேர சத் பூஜா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.விருந்தினர்களுக்கு தமது கைப்பட உணவை அவர் பரிமாறினார்