சென்னை 28 2ம் பாகம்(Chennai 600028 II Innings) Movie Teaser 2016

சென்னை 28 2ம் பாகம்(Chennai 600028 II Innings) Movie Teaser 2016

87


வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தனது அடுத்த இன்னிங்சை துவக்கியுள்ளது. அப்படத்தின் டீஸர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சென்னை 28 படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நட்பை வெளிப்படுத்தும் படம் என்பதால் இதுபோன்ற ஒரு முயற்சியை செயல்படுத்தினார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பையும் வெங்கட்பிரபு ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவி இயக்குநர்களும் தற்போது இயக்குநர்களாகவும் உள்ள வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சரவண ராஜன், ஸ்ரீபதி, சந்துரு, நாகேந்திரன் ஆகிய 5 பேரும் இயக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY