Home Tamil Cinema News மீண்டும் விளையாட வருகிறது சென்னை 28

மீண்டும் விளையாட வருகிறது சென்னை 28

108

01-1456811923-chennai-28

கடந்த 2007ம் ஆண்டு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த் , விஜயலட்சுமி, சம்பத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

இது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு முதல் படமாகும். தனது முதல்படமான இதில், உள்ளூர் கிரிக்கெட்டை வித்தியாசமாக, அதே சமயம் விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து தமிழில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரானார் வெங்கட் பிரபு.

கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் மாசு என்கிற மாசிலாமணி படத்தை எடுத்திருந்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், தனது வெற்றிப்படமான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில் தற்போது ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு யுவன் இசையமைக்க இருக்கிறார். ப்ளாக் டிக்கெட் நிறுவனம் மூலமாக இயக்குநர் வெங்கட்பிரபுவே இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here