மெரீனா பகுதியில் அப்பாவி பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் போலீஸ்!

மெரீனா பகுதியில் அப்பாவி பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் போலீஸ்!

16

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி 8 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திங்கட்கிழமையன்று காலையில் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம், மர்மநபர்களால் தீ வைக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் கொடூர தக்குதல் நடத்தியதால் அவர்கள் கடல் பகுத்திக்குள் சென்று போராட்டத்தை தொடர்ந்தனர். மீனவ குடியிருப்பு பகுதியில் இருந்தவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்தனர். திங்கட்கிழமையன்று கடற்கரையை விட்டு வெளியேற மறுத்து கடல் தண்ணீருக்கு அருகில் சென்றவர்கள் பலரும் உணவின்றி தவித்தனர். அவர்களுக்கு படகு மூலம் உணவு கொண்டு வந்து கொடுத்து மீனவர்கள் உதவினர். இதன் காரணமாகவே மீனவர்கள் மீது போலீசின் கோபம் திரும்பியுள்ளது.

இதனையடுத்தே மீனவர் குடியிருப்பு பகுதிக்குள் தேடி தேடி அப்பாவிகளை கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் நுழைந்த போலீசார் குடியிருப்பு பகுதி என்றும் பாராமல் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.

வாகனங்களை தங்கள் லத்தியால் அப்போது அவர்கள் வேண்டுமென்றே சேதப்படுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

பெண் போலீஸ் ஒருவரே தீ வைத்த காட்சி பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று இரவும் ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, சிவராஜபுரம், மாட்டாங்குப்பம், நடுக்குப்பத்தில் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் ஆண்கள் பலரும் அஞ்சி வீடுகளுக்கு திரும்பவில்லை.

அலறியடித்து ஓடிவந்தவர்களுக்கு வீட்டு கதவுகளை திறந்து விட்டோம். போலீசார் தள்ளிவிட்டு விட்டு இரும்பு கம்பியால் அடித்து சென்றனர் என்று பெண்கள் குற்றம் சாட்டினர். சாப்பிட கூட விடவில்லை. வீடு வீடாக புகுந்து போலீசார் தேடினர் என்றும் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாங்கள் எல்லாம் அப்பாவிகள், வீட்டில் அமைதியாக படுத்திருந்தவர்களை கலவரம் செய்தாக கூறி கைது செய்துள்ளனர் என்பது பெண்களின் புகார். வீட்டிற்கு ஒருவரை கைது செய்வோம் என்றும் 300 பேர் வரை போலீசார் கைது செய்ய திட்டமிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆண்கள் யாரும் இதுவரை வீடு திரும்பவில்லை.

போலீஸ் கைதுக்கு அஞ்சி பலரும் வெளியில் தங்கியுள்ளனர். அவர்களை வரவழைப்பதாக வீடுகளில் உள்ள பெண்களை போலீசார் மிரட்டியதாகவும், சிலர் அடித்தாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY