Home Tamil Cinema News சென்னை தான் எனக்கு விலாசம் கொடுத்தது – நடிகை கேத்ரின் தெரசா

சென்னை தான் எனக்கு விலாசம் கொடுத்தது – நடிகை கேத்ரின் தெரசா

188

cathrine

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானார், இருப்பினும் தற்போது கதகளி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். இது பற்றி கேத்ரின் தெரசா கூறுகையில்,

நான் கேரளப்பெண். என் அம்மா துபாயில் இருக்கிறார். அப்பா எனக்கு உதவியாக வருகிறார். தற்போது ஐதராபாத்தில் தங்கி இருக்கிறேன். நடிகைகளில் முதல் இடம் இரண்டாவது இடம் என்ற கவலை இல்லை. என் படங்கள் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். இது தான் என் லட்சியம். தமிழ் ரசிகர்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான் என்றாலும் சென்னைத்தான் எனக்கு விலாசம் கொடுத்திருக்கிறது. எனக்கு துபாயை விட இந்தியாவில் தான் பல சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. எப்போதாவது தான் துபாய் செல்வேன். கல்லூரியில் படிக்கும் போது கன்னடம், மலையாள படங்களில் நடித்திருந்தேன்.

தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, அது இப்போது நிறைவேறி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மெட்ராஸ் படத்தில் நடித்த பின் சிறிய இடைவெளி இருந்தது. ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறேன். இப்போது கதகளிக்கு பிறகு கணிதன், வீரதீரசூரன் என்று வரிசையாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. இனி இடைவெளியே இருக்காது என நம்புகிறேன்.

கதகளியில் என்னுடன் நடித்த விஷால் நல்ல உழைப்பாளி. நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவார். நல்ல நடிகர். நான் முடிந்த வரை ஒவ்வொரு படத்திலும் வெல்வேறு விதமாக நடிக்க முயற்சி செய்வேன். ஒரே மாதிரி நடிப்பதை தவிர்ப்பேன். நேரம் கிடைக்கும் போது புத்தகம் படிப்பேன், டி.வி. பார்ப்பேன் மற்றபடி பொழுது போக்குவதற்கு நேரமே இருக்காது. எப்போதாவது சமையல் செய்வேன் என்று கேத்ரின் தெரசா கூறியுள்ளார்.