Home Tamil Breaking News சென்னையில் விடிய விடிய மழை!

சென்னையில் விடிய விடிய மழை!

28

சென்னை: சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பம்மல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு லேசாகவும் மிதமாகவும் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே உள்ளது.
மழை காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சுணங்கியுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் விற்பனையும் மந்தமாக உள்ளது.
ஆனால் இந்தக் கொண்டாட்டத்தை விட மழை முக்கியம் என்பதால், மக்கள் யாரும் வருத்தப்படவில்லை.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here