லாரிக்கு தீ வைத்த பொதுமக்கள்.. சென்னையில் பரபரப்பு

லாரிக்கு தீ வைத்த பொதுமக்கள்.. சென்னையில் பரபரப்பு

34

சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். அவரும் அவரது மனைவி, 5 வயது மகள் பிரியதர்ஷினி ஆகியோரும் நேற்றிரவு பைக்கில் வீடு திரும்பினார். மெகசின்புரம் பகுதியில் பின்னால் இருந்து வந்த லாரி மோதியதில் மூவரும் கீழே விழுந்தனர்.

சம்பவ இடத்திலேயே பிரியதர்ஷினி உயிரிழந்த நிலையில், பிரேம்குமார் அவரின் மனைவி ஆகிய இருவரும் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை பார்த்து கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள், லாரிக்கு தீ வைத்தனர். இதனால் லாரி முன்பகுதி முழுவதும் கருகியது.

அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், அப்பகுதியிலுள்ள வேகத்தடையை நீக்கியதை எதிர்த்து பொதுமக்கள் குறல் எழுப்பினர். இரவு 11 மணிக்கு முன்பாக கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் குறல் எழுப்பினர்.

NO COMMENTS

LEAVE A REPLY