Home Tamil Cinema News இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறும் சேரன்

இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறும் சேரன்

80

Cheran Says If i Think I Fought for Tamils in Sri Lanka is Outrageously

இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று இயக்குனரும், நடிகருமான சேரன் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேரன், தயாரிப்பாளர்கள் திருட்டி டிவிடியால் கஷ்டப்படுவதை பற்றி பேசினர்.

அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள், போலீசும் அதை கண்டுகொள்ளவில்லை. தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.

ஆனால் அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள் என்று சொல்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக நாம் திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். அவர்களில் சிலர் தான் இதை செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை செய்தோம் என அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.