Home Tamil Breaking News முதல்வர் எடப்பாடி…- சபாநாயகருடன் தீவிர ஆலோசனை…!!!

முதல்வர் எடப்பாடி…- சபாநாயகருடன் தீவிர ஆலோசனை…!!!

22

அடுத்த முதல்வராக சபாநாயகர் தனபால் தான் வரவேண்டும் என தெரிவித்த திவாகரனின் முடிவை முறியடிக்கும் வகையில் இன்று சபாநாயகருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமானதைதொடர்ந்து அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் திளைத்துள்ளனர்.

சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என எடப்பாடி தரப்பு அறிவித்ததையடுத்து தொடர்ந்து பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. எடப்பாடி அணியை சேர்ந்த வைத்தியலிங்கத்தின் அறிவிப்புக்கு பிறகு அதிமுக பதவியில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கி வருகிறார் டிடிவி.

இதனிடையே டிடிவி தினகரனுடன் மோதலில் இருந்த திவாகரன் திடீரென ஆதரவு கரம் நீட்ட ஆரம்பித்தார். அதனைதொடர்ந்து கட்சியை மீட்க வேண்டும் என்ற டிடிவியின் நம்பிக்கை மேலும் கூடியுள்ளது என்றே சொல்லலாம்.
எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டது என்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்து பேட்டியளித்தனர்.

அப்போது தஞ்சையில் பேட்டியளித்த திவாகரன், சபாநாயகர் தனபால் தான் முதல்வராக வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், அதை முறியடிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபாலுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனால் அடுத்து என்ன நடக்குமோ கதிகலக்கத்தில் இருக்கின்றனர் திவாகரன் தரப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here