Home World News சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை: மசூர் ஆசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடைமுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளது

சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை: மசூர் ஆசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடைமுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளது

105
பதன்கோட் விமான படை தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட  பயங்கரவாதி மசூர் ஆசாத்துக்கு எதிரான ஐநா நடவடிக்கைக்கு தனது வீட்டோ அதிகாரம் மூலம் சீனா முட்டுக்கட்டை போட்டது. இந்த சம்பவம் இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், சீனா மட்டும் ஆறு மாதம் அவகாசம் கேட்டு மசூர் ஆசாத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், இந்தியா கொண்டு வந்த தீர்மானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு காலாவதியானது. 
 
இதையடுத்து, மசூத் ஆசாருக்கு தடை விதிக்க கோரி, பிரான்சு , பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவுடன் அமெரிக்கா புதிய தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் தொடர்பாக முடிவு எடுக்க ஆறு மாதம் அவகாசம் கேட்ட சீனா, தங்கள் முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. சீனாவுக்கான கெடு நேற்று (ஆகஸ்ட் 2) முடிவுக்கு வந்தது. 
 
இந்த நிலையில், சீனா  தனது முடிவு எடுக்கும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் காரணமாக மசூர் ஆசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடைமுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சீனாவின் முந்தைய காலக்கெடு முடிந்ததையடுத்து அது நீட்டிக்கப்படாவிட்டால், சீனாவின் எதிர்ப்பு காலாவதியாகி தானாக மசூர் ஆசாத் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படும் நிலை இருந்தது. ஆனால், இந்த காலக்கெடு முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சீனா மீண்டும் மூன்று அவகாசம் கேட்டுள்ளது. அதன்படி நவம்பர் 2 ஆம் தேதி சீனாவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here