விக்ரம் பட டீஸரை ஒன்ஸ்மோர் போட சொன்ன தெலுங்கு நடிகர்!

விக்ரம் பட டீஸரை ஒன்ஸ்மோர் போட சொன்ன தெலுங்கு நடிகர்!

102

Iru Mugan

விக்ரமின் நடிப்பில் தயாராகி வரும் படம் இருமுகன். இதன் டீசர் சமீபத்தில் தமிழில் வெளியாகி ரசிகர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இதனால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்பு அதிகமகியுள்ளது.

இதனையடுத்து அண்மையில் நடந்த SIIMA விருது விழாவில் விக்ரமின் (இன்கோகடு) தெலுங்கு டத்திற்கான தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரை ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார்.

டீசரை பார்த்த சிரஞ்சீவீ மறுபடியும் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது இருமுகன் படக்குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இருமுகன் படத்தில் விக்ரம், நயன்தாரா உடன் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

விக்ரமின் இன்கோகடு தெலுங்கு பட டீசர்

NO COMMENTS

LEAVE A REPLY