Home Tamil Cinema News எதிர்ப்பையும் மீறி கத்தி பட ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி முடிவு

எதிர்ப்பையும் மீறி கத்தி பட ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி முடிவு

147

chiranjeevi

சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடிப்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறார். புரி ஜெகனாத் இயக்கத்தில் நடிக்க நினைத்தவர் ஸ்கிரிப்ட் சரியில்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டார்.  விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் உருவான ‘கத்தி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க முடிவு செய்தார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த திட்டத்தையும் தள்ளிப்போட்டார்.

அரசியல் பிரமுகரான சிரஞ்சீவி காதல் கதையிலோ, ஆக்‌ஷன் கதையிலோ நடித்தால் பொருத்தமாக இருக்காது, சமுதாயத்துக்கு கருத்து சொல்லும் விதமான கதையில் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று ஆலோசனை கூறினர்.

இதனால் சிரஞ்சீவி மீண்டும் ‘கத்தி’ ரீமேக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை சமீபத்தில் அவரது மகனும், நடிகருமான ராம் சரண் உறுதி செய்திருக்கிறார்.

இப்படத்தை வி.வி.வினாயக் இயக்க உள்ளார். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தை தெலுங்கில் இவர் தகுந்த மாற்றங்களுடன் இயக்கி ஹிட் படமாக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

Comments are closed.