Home Tamil Breaking News கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

25

நீட் தேர்வுக்கு எதிராக கோவை காந்திபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

காந்திபுரத்தில் திரண்ட அவர்கள், நீட் தேர்வுக்கு எதிராகவும், எச்.ராஜா, கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். திடீர் என்று சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், சாலைமறியலைக் கைவிட்டு, அமைதியான முறையில் போராடும் படி கேட்டுக் கொண்டனர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்ய முற்பட்டனர். இதை அடுத்து மாணவ மாணவிகள் சாலையில் படுத்துக் கொண்டு போராடினர். அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here