Home Tamil Cinema News ராம்கி மீது புகார் கொடுத்த கல்லூரி மாணவி

ராம்கி மீது புகார் கொடுத்த கல்லூரி மாணவி

171

Actor Ramki in Masani Tamil Movie Stills

நடிகர் ராம்கி தமிழ் சினிமாவில் 90களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது பிரியாணி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம்வர இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் ஈரோடு காவல் நிலையத்தில் நடிகர் ராம்கியின் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் நடிகர் ராம்கி என் தாய் மாமா. நான் என் காதலரை திருமணம் செய்துக்கொண்டேன், இது என் குடும்பத்தினருக்கும், என் தாய்மாமா ராம்கி அவர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர் எங்களை பிரிக்க நினைக்கிறார்.

இதனால் எனக்கும், கணவர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என அந்த கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ளார். இதனால் இந்த புகாரின் காரணமாக ராம்கியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.