Home Tamil Breaking News ரயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை வைத்து அராஜகம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது!!

ரயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை வைத்து அராஜகம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது!!

29

திருவள்ளூர்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்று கூறிக்கொண்டு, ரயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை பிளாட்பாரத்தில் உரசியபடியே பயணிகளை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் காட்சிகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை அடுத்து நெமிலிச்சேரியில், ரயில் நுழையும்போது படிக்கட்டில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள், பிளாட்ஃபார்மில் பட்டா கத்தி, அறிவாள் உள்ளிட்டவற்றை உரசியபடி பொறிபறக்கச் சென்றனர்.

ரயில் நிலையத்திலும், ரயிலிலும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பொருளான பட்டாசை நெமிலிச்சேரி ரயில்நிலையத்திலேயே கொளுத்தி அவர்கள் ரயில் தினம் கொண்டாடியுள்ளனர். அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மார்க்கமாக சென்னை வரும் மின்சார ரயிலில் சென்ட்ரல் வரும் வரை இதுபோன்று தினமும் அட்டகாசம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனிடயே மாணவர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டது உறுதியானால், அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகக் கூறிய அவர், தேவைப்பட்டால் மாணவர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரயிலில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.