Home Tamil Cinema News காதலை பற்றி கருத்து தெரிவித்த அனுஷ்கா!

காதலை பற்றி கருத்து தெரிவித்த அனுஷ்கா!

402

Anushka-Shetty-19நடிகை அனுஷ்கா தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து யவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் காதலை பற்றியும் தனது திருமணம் எப்போது என்பதை பற்றியும் பதில் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் காதல் என்பது வெறும் காவர்ச்சி தான், அந்த மாயை வலையில் பலர் இளம் வயதில் மாட்டி கொள்கிறர்கள். எனக்கு காதல் அனுபவம் கிடையாது, காதலிக்க நேரமும் இல்லை, பல பேர் இளம் வயதில் காதல் வலையில் சிக்கி பிறகு காலபோக்கில் அதை யோசித்து பார்த்து சிரிப்பார்கள். நான் அவ்வாறாக இல்லை.

நான் தற்போது சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறேன், சினிமா மட்டுமே என் காதல். என் திருமணம் தகுந்த நேரத்தில் நடக்கும், எனக்கு வரபோகும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன். அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்க கூடாது வெளிப்படையாக பழக வேண்டும். எனக்கு பிடிக்கும் விஷயங்கள், அவருக்கும் பிடிக்க வேண்டும்.

அப்படி பட்டவரை சந்திக்கும் தருணத்துக்காக காத்திருக்கிறேன் இவ்வாறாக அனுஷ்கா கூறியுள்ளார்.