லிங்குசாமி இயக்கத்தில் சண்டகோழி 2 படத்தில் நடிக்கவிருக்கும் விஷால்

லிங்குசாமி இயக்கத்தில் சண்டகோழி 2 படத்தில் நடிக்கவிருக்கும் விஷால்

98

vishal

இயக்குநர் லிங்குசாமி, விஷால் நடிப்பில் சண்டகோழி 2 படத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்குப் பதிலாகத் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கொண்டு புதிய படத்தைத் தொடங்க இருந்தார். உடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சண்டகோழி 2 விவகாரம் தொடர்பாக விஷால் – லிங்குசாமி இடையே மோதல் எழுந்தது. இந்த நிலையில் இருவரும் சமரசம் ஆகியுள்ளார்கள். சண்டகோழி 2 படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். இந்த தகவலை விஷால் உறுதி செய்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டகோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படம் வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி-விஷால் ஆகிய இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY