Home Tamil Cinema News பீப் பாடலை அடுத்து சர்ச்சையில் பிச்சைக்காரன் பாடல்

பீப் பாடலை அடுத்து சர்ச்சையில் பிச்சைக்காரன் பாடல்

238

Tamil-Actor-Vijay-Antony-Upcoming-Movie-Pichaikaran-Release-Date-Trailer-Cast-Songs-Listஇயக்குனர் சசி அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து வரும் படம் பிச்சைக்காரன். இப்படத்தில் இடம்பெரும் பாடல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இப்பாடலில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளதாக பிரச்சனை எழுந்துள்ளது. இந்த பாடலுக்கு எதிராக சில அமைப்புகள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த பாடலின் பாடல் வரிகளில் இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்களை மிகவும் மோசமாக சித்தரிக்கிறது.

இப்பாடலுக்கு உடனடியாக தடை விதிப்பதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பை தூண்டுவதற்காகவும், ஒடுக்கப்பட்டோரை இழிவுப்படுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமத்துவ அமைப்பு ஒன்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது என்று அதன் தலைவர் கூறியுள்ளார்.