Home Tamil Cinema News காஸ்ட்யூம் டிசைனரை நெகிழ வைத்த நடிகர் விஜய்!

காஸ்ட்யூம் டிசைனரை நெகிழ வைத்த நடிகர் விஜய்!

182

therireleas

காஸ்ட்யூம் டிசைனர் சத்யா மான் கராத்தே, ராஜா ராணி, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் நடிக்கவிருக்கும் 60-வது படத்திற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த வாய்ப்பு நடிகர் விஜய்யால் தான் வந்தது என்று கூறுகிறார்.

இதுகுறித்து சத்யா கூறும்போது, தெறி படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். ஒரு முறை படப்பிடிப்பில் காஸ்ட்யூமை கொடுத்துவிட்டு, நான் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்று விட்டேன். அவருடைய உதவியாளர் வந்து விஜய் உங்களை அழைக்கிறார் என்றார். நானும் என்னானது என்று தெரியவில்லையே என்று பயத்தோடு சென்றேன்.

உங்களுடைய காஸ்ட்யூம் டிசைன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது அடுத்த படத்தில் நீங்கள் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுகிறீர்களா? வேறு எதுவும் படம் ஒப்புக் கொண்டு இருக்கிறீர்களா? என்று கேட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினார் விஜய்.

என்ன சார் இப்படி கேட்கிறீர்கள், கண்டிப்பா செய்கிறேன்’ என்றேன், நான் இயக்குனரிடம் பேசுகிறேன். நீங்கள் போய் பாருங்கள் என்று விஜய் கூறினார். அவர் அளித்த வாய்ப்பு இது. படத்தில் காஸ்ட்யூம் டிசைன் நன்றாக இருக்கும் நீங்களே பாருங்கள் என்று கூறினார் சத்யா.