Home Tamil Cinema News பீப் பாடல் வழக்கில் சிம்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

பீப் பாடல் வழக்கில் சிம்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

125

simbu

சில நாட்களுக்கு முன்பு பீப் பாடல் விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால் சிம்பு மற்றும் அனிருத்தின் சினிமா வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் இன்று அதனை மக்கள் தற்போது மறந்து விட்டனர். இருப்பினும் இதன் வழக்கு இன்னும் நீதிமன்றந்தத்தில் நடந்து தான் இருக்கின்றது.

இந்த வழக்கினை கோவை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்ததால் சிம்பு, அனிருத் இருவரும் கோயமுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.

இந்தநிலையில் அனிருத் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டார். ஆனால், சிம்பு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இதனால் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி சிம்பு வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here