Home Tamil Cinema News பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென கிரிக்கெட் வீரர் பிராவோ விருப்பம்

பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென கிரிக்கெட் வீரர் பிராவோ விருப்பம்

79

Bravo_AP

ஐபிஎல் போட்டிக்காக இந்தியா வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் டிவைன் பிராவோ தனக்கு பாலிவுட்டில் நடிக்க ஆர்வமாக உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, பாலிவுட்டுக்குள் நுழைவது என் கனவுகளில் ஒன்று. ஒருகட்டத்தில் நிச்சயம் அதைச் செய்துகாட்டுவேன். ஏற்கெனவே சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேசமயம் கிரிக்கெட்டுக்குதான் முக்கியத்துவம் அளிப்பேன்.

இந்திய பாலிவுட்டில் சல்மான் கான் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோருக்கு நான் ரசிகன். ஹிந்திப் படங்கள் நான் பார்த்துள்ளேன். என்னால் சில ஹிந்தி வார்த்தைகளைப் பேசமுடியும் என்று கூறினார்.