Home Tamil Breaking News பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து விபத்து: 6 பேர் பலி

பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து விபத்து: 6 பேர் பலி

41

பெங்களூரு: பெங்களூருவில் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். பெங்களூருவில் உள்ள எஜிபுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை 6.30 மணியளவில் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

இதில், அந்தக் கட்டிடம் தரைமட்டமானது. இதனையடுத்து இடர்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டட இடர்பாடுகளுக்கு சிக்கியிருந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். இச்சிறுமியின் பெற்றோர்கள் உயிரிழந்துள்ளதால், அவளை தத்துதெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.