Home Tamil Cinema News ரசிகர்களின் தொடர் கண்டனத்தால் தீபிகாவின் பெயரை வெளியிட்ட டெய்லி மெயில்

ரசிகர்களின் தொடர் கண்டனத்தால் தீபிகாவின் பெயரை வெளியிட்ட டெய்லி மெயில்

111

deepika-padukone

பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை, டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் டின்னருக்கு சென்ற தீபிகா படுகோனேவின் பெயரை வெளியிடாமல், வெறும் பெண் துணை என்று மட்டும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

இதனால் தீபிகா டின்னருக்கு சென்ற விவகாரத்தை விட தீபிகாவின் பெயரைப் போடாமல் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

இதன் காரணமாக ட்விட்டரில் #Deepika Padukone என்ற ஹெஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்டானது. அதில் குவிந்த ட்வீட்டுகள் முழுவதும் தீபிகா படுகோனேவை டெய்லி மெயில் அங்கீகரிக்கத் தவறியது பற்றியே இருந்தன.

இந்த நிலையில் அந்தப் பத்திரிக்கை தற்போது தனது செய்தியை மாற்றி தீபிகா படுகோனேவின் பெயருடன் வெளியிட்டுள்ளது.

மேலும், தீபிகாவின் படங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் டெய்லி மெயில் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் என தீபிகாவை புகழவும் செய்திருக்கிறது. இதனால் தீபிகா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here