Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 01/04/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 01/04/2016

255
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: திருவாதிரை


mesahamமேசம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். உங்கள் சகோதரர்களால் பயன் அடைவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள்.


mithunam

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


kadakam

கடகம்: இன்று உங்களுக்கு வேலைச் சுமையால் உடல் அசதி வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.


kanni

கன்னி: இன்று நீங்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளா தீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேன்டியிருக்கும். போராட்டமான நாள்.


thulam

துலாம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.


viruchigamவிருச்சிகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்-. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


kumbam

கும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதம் வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


meenam

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத் தில் சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here