Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 04/03/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 04/03/2016

288
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்


mesaham

மேசம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இனிமையான நாள்.


rishabam

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புது நட்பு  மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.


mithunam

மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலத்தில் கவனம் தேவை.  வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.  


kadakam

கடகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.


simam

சிம்மம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.


kanni

கன்னி: இன்று நீங்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானம்  ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து  கொடுக்க வேண்டிய நாள்.


thulam

துலாம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது  யோசிப்பீர்கள்.  வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய  சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.


dhanusu

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை  நிறைவேற்றுவீர்கள்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.


kumbam

கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.