Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 09/12/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 09/12/2016

169
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 10.30 – 12.00  
மாலை – 5.30 – 6.00    மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: ஹஸ்தம் 


mesaham

மேசம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்திவரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உதவுவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


rishabamரிஷபம்: தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.


kadakamகடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


simam

சிம்மம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


kanniகன்னி: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னைகள் தீரும். உழைப்பால் உயரும் நாள்.


thulamதுலாம்: வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கிய அறிவரைத் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அமோகமான நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிசெய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.


kumbam

கும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.