Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 10/06/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 10/06/2016

434
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்


mesahamமேசம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


rishabamரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.


mithunamமிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


kadakamகடகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரிகள் ஆதரிப்பர். நன்மை கிட்டும் நாள்.


simamசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். 


viruchigamவிருச்சிகம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.


dhanusuதனுசு: இன்று நீங்கள் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


magaramமகரம்: மறைமுக விமர்சனங்களும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


kumbam

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.