Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 11/03/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 11/03/2016

339
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.00 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்


mesaham

மேசம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.


rishabamரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மனநிறைவு கிட்டும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிட்டும். தொட்டது துலங்கும் நாள். 


kadakam

கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


simam

சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


kanni

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிலும் உற்சாகம் வெளிப்படும் நல்ல நாள்.


thulam

துலாம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணபேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


viruchigam

விருச்சிகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 


dhanusuதனுசு: இன்று நீங்கள் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.வியாபாரத்தில் பழைய சரக்குகளை  போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.  தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமை தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். போராடி வெல்லும் நாள்.


meenamமீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here