Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 13/05/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 13/05/2016

457
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 1.30 – 2.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: உத்திராடம்


mesaham

மேசம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பர செலவை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


mithunam

மிதுனம்: இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


kadakam

கடகம்: இன்று உங்களது பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானங்கள் உங்களுக்கு வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


simam

சிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


kanni

கன்னி: சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.


thulam

துலாம்: கடந்த இரண்டு நாளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


viruchigam

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தினருடன் நீங்கள் மனம் விட்டு பேசி  மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.


magaramமகரம்: கடந்த 2 நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப் பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்பு தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


kumbamகும்பம்: எதிர்பார்த்த வேலை  தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


meenamமீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here