Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 13/11/2015

இன்றைய ராசிபலன் – வெள்ளி 13/11/2015

237
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 9.15 – 10.15 காலை – 10.30 – 12.00 காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45 மாலை – 3.00 – 4.00

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி


mesahamமேசம்: இன்று நீங்கள் சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அனுபவம் இல்லாத காரயங்களை செய்ய வேண்டாம். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


rishabam

ரிஷபம்:  விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி மற்றும் உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீட்டை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள்.  குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


kadakam

கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கனவு நனவாகும் நல்ல நாள்.


simam

சிம்மம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


kanni

கன்னி: சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நல்ல நாள்.


thulam

துலாம்: முகப்பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும்.  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


dhanusu

தனுசு:  இன்று நீங்கள் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.  குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நல்ல நாள்.


magaram

மகரம்: உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இனிமையான நாள்.


kumbam

கும்பம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த பயணங்கள் மேற்கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நல்ல நாள்.


meenam

மீனம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நல்ல நாள்.